Tuesday, March 6, 2012

penne un perumaiyai unarvai

        பெண்ணே நீ உன்னுள் புதைந்துள்ள  சக்தியை உணர்வாய்.  ஆக்க பிறந்தவள் பெண்.  சோறு ஆக்க மட்டுமல்ல.  உலகை ஆக்கவும் தான். உயிர்களை  ஈன்று தருவதோடு  உன் ஆக்க  பணிகள்முடிவதில்லை. கலைகளில் ஆக்கம், விஞ்ஞானத்தில்  முன்னேற்றம், அடுத்த தலை முறையினரை  சிறப்பாக  உருவாக்கல், இப்படி  உனது ஆக்க பணிகளின்  பட்டியல்  நீண்டு கொண்டே போகிறது.  கடமையை உணர்வாய்  கட்டிகாப்பாய்  சமுதாயத்தை.
             நாம்  பிறந்த  பூமியும்  பெண்ணாக உருவகிக்க  படுகிறாள்.  பராசக்தியும்  பெண்ணாக உருவகிக்க  படுகிறாள். ஆறும்  கடலும் அன்னைக்குலமாக  உருவகிக்க   படுகின்றன.  ஜோதி  வடிவமும் பெண்ணாய்  கருதப்படுகிறாள். பறந்து விரிந்த வானில்  நிலவும்  பெண்ணாய்க்  கருதப்படுகிறது.
         நிலம், நீர், அக்னி(ஜோதி) ஆகாயம், வாயு(சக்தி)  என பஞ்ச  பூதங்களும்  பெண் உரு  என்றால்  பெண்ணின் பொறுப்பு எத்தகையது? அவளின் சக்தி எத்தகையது?   எனவே பெண்ணே  உன் ஆக்க சக்திகளை  தடுக்கும்  சக்தி  எத்தகையதாயினும்   அதனை  உடைத்துகொண்டு  வெளியே வா.  உருவாக்கு  உன்னத  சமுதாயத்தை.  பெண்ணே நீ வாழ்க.  மகளிர்  தினம் இன்று மட்டுமல்ல.  என்றுமே   தான்.  -கலாவதி ரெங்கசாமி .