Sunday, September 13, 2009

navaraathri paadalgal-1

நவராத்ரி  பாடல்கள்-௧
பல்லவி
ஒம், ஒம், ஒம்
ஓமென்ற ஓங்கார  ஒசைதனில்
ஒன்றான சக்திகளின் சங்கமமே
அனு பல்லவி 
நாமென்ற நமகாரம் நமைவிட்டு நீங்கிடவே 
மாபெரும்  சக்திதனை வணங்கி  வழிபடுவோம்
சரணம்-௧
நேமியுடன் சக்கரமும் நெற்றி திலகமுமே
பூமியிலே சக்திகளின் சங்கமத்தின் பிரதிபலிப்பே
ஓமெனும்  கரிய  சக்தயுடன் சங்கமிக்கும் 
யம்மேண்டற ஞான சக்தியும் இம்மேன்ற  இச்சாசக்தியுமே
சரணம்-௨
நவநவமாய்  வடிவாகும்  நானாவித சக்திகளை
நாவாலும் மனதாலும்  நல்லுடலாலும் பூஜிக்க
நல்லதோர் தருணமிதே நவராத்ரி நன்னாளே
நவரச  நாயகியின் நல்லடி  பணிவோமே
 -கலாவதி ரெங்கசாமி 

No comments: