Monday, September 14, 2009

Navathri paadalgal-4

m


                    நவராத்ரி  பாடல்கள்-௪
ஊழிநடம் புரின்கின்ற  உலகத்தாய் நீயன்றோ
ஊழ்வினைகள் களைந்திடவே உனையன்றி வேறு கதியுண்டோ
அனுபல்லவி
சூழ்கின்ற  பலவினைகள் போக்கிடவே துணைபுரிவாய்
நாழிகையும்   உன்நாமம்   மறவாமல் நானுரைப்பேன்   
சரணம்
சுழல்கின்ற பூமியிலே சுடர்கின்ற ஒளிநீயே
அழல்தரூ அக்கினி ஜ்வாலை  நீயம்மா
முழங்குமலை கடல்நீரும் முழுக்கற்றும் உன்னுருவ்ர்
விழுமிய வெட்டவெளி வினயாவும்  நீயன்றோ 
சரணம்-௨
ஐம்பெரும்  பூதங்களின்  ஆதார  ஆனவளே-என்
ஐம்புலனில் அன்றாடம்   ஆட்சி  செய்பவளே
ஐந்துகடல்  சூழ்ந்திட்ட  அகிலம்  யாவையுமே
ஓங்காரியே   உன்ப்ரணவ  வடிவ  உட்போருளன்றோ
                                                             -கலாவதி  ரெங்கசாமி

No comments: