Monday, September 21, 2009

NAVARATHRI PAADALGAL-6



நவராத்ரி  பாடல்கள்-௬
                   பல்லவி
திருவெல்லாம் நிறைந்திட்ட திருமகளே
 திருமாலின் திருமார்பில்  திகழ்பாவளே
                   அனு  பல்லவி
திருவிளக்கின் ஜோதியும்   நீயன்றோ - அழகுடை
பொருள்யாவும்   உந்தன்  வடிவன்றோ
                      சரணம்
பொருளோடும்  புகழோடும்  வாழ்ந்திடவே -உன்
திருஅருளை  வேண்டுகிறோம்  தினம்தினம்
ஒருகுறையின்றி  யாம்  வாழ்ந்திடவே-நின்
அருட்பார்வை  தனைவேண்டி  பாடுகிறோம்
                      -கலாவதி  ரெங்கசாமி

No comments: