நவராத்ரி பாடல்கள்-௨
பல்லவி
அன்னையே அனுதினமும் அருள்வாயே
நின்னையே பணிந்தேன் நிகரில்லா தாயே
அனு பல்லவி
மின்னொளி வீசும் மேனியளே
உன்னிலே உலகு அடக்கமன்றோ
சரணம்
சென்னியில் துலங்கும் திலகத்திலே
திரி புவனம் யாவும் தெரிகிறதே
நின்னடி பணியும் மனுக்குலத்தை
அறியினில் அமர்ந்து காப்பவளே
(அன்னையே)
கலாவதி ரெங்கசாமி
No comments:
Post a Comment